Connect with us

வேலைவாய்ப்பு

அரசு வேலை: மாவட்ட சுகாதாரத் துறையில் 276 பணியிடங்கள் – விண்ணப்பிக்க வேண்டிய விபரங்கள்!

Published

on

அரசு வேலை: மாவட்ட சுகாதாரத் துறையில் 276 பணியிடங்கள் – விண்ணப்பிக்க வேண்டிய விபரங்கள்!

காஞ்சிபுரம் மாவட்ட அரசு புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

உணவியல் நிபுணர், ஆய்வக நுட்புநர், பல் சுகாதார நிபுணர், ஈசிஜி தொழில்நுட்ப வல்லுநர், அறுவை அரங்கு நுட்புநர், ஓட்டுநர், லிப்ட் மெக்கானிக், ஏசி மெக்கானிக், மருந்தாளுநர், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர், ரேடியோகிராபர், அலுவலக உதவியாளர், செவிலிய உதவியாளர், சமையலாளர், நாவிதன், துப்புரவு பணியாளர், பாதுகாவலர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட மொத்தம் 276 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, DMLT, ஏதேனும் ஒரு டிகிரி, D.Pharm/B.Pharm, BPT, Diploma in Radio Diagnosis Technician, B.Sc, BCA, M.Sc போன்ற தகுதிகள் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் போர்கள் https://kancheepuram.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம். அல்லது காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ பெற்றுக்கொள்ளலாம்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

  • பிறப்புச் சான்றிதழ் நகல்
  • 10ம், 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் நகல்
  • ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை நகல்
  • No Objection சான்றிதழ்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
42A. இரயில்வே ரோடு,
அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501.
 தொலைபேசி: 044 2722 2019

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.02.2025 மாலை 05:45 மணிக்குள்.

Translate »
Build course landing pages with video previews, countdown timers, and Stripe checkout at a flat 5% fee..