சினிமா செய்திகள்
அதிதி ராவுக்கு அதிர்ச்சியளித்த கூகுள்! என்ன விஷயம் தெரியுமா?

காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் என இயக்குநர் மணிரத்னத்தின் ஃபேவரைட் நாயகியான அதிதி ராவ், தன்னைப் பற்றி தான் கூகுளில் தேடுவதை நிறுத்திவிட்டதாக கூறியுள்ளார்.
பாலிவுட் படங்களில் நடித்து வந்த அதிதி ராவை காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நாயகியாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் மணிரத்னம். அதற்கு அடுத்து தமிழ் சினிமாவில் பல வாய்ப்புகள் அதிதி ராவுக்கு வந்தாலும், தன்னை படுக்கைக்கு அழைக்கின்றனர் என்றும், நல்ல கதைகள் இல்லை என்றும் பிற இயக்குநர் படங்களில் நடிக்க மறுத்து வந்தார் அதிதி.
மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்கச்சிவந்த வானம் படத்தில், ரிப்போர்ட்டராகவும், அரவிந்த்சாமியின் அந்தரங்க காதலியாகவும் படு கவர்ச்சியாக அதிதி ராவ் நடித்தார்.
ஆனால், அந்த படத்திற்கு பிறகும், அவருக்கு வேறு பட வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில், கூகுளில் தன்னைப் பற்றித் தேடினால், ஆபாசமான புகைப்படங்களும், செய்திகளும் அதிகளவில் வருவதால், தன்னைப் பற்றி கூகுளில் தேடுவதை தான் நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.

















