சினிமா
பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்: சோழர்களுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா?

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 இன்று உலகம் முழுவதும் வெளியானது.
அஜித்தின் துணிவு படம் எல்லாம் நள்ளிரவு 1 மணிக்கு வெளியான நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் முதல் காட்சியே வெளியானது.

#image_title
சியான் விக்ரம், ஜெயராம் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் படத்தை பார்த்து ரசித்தனர்.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நல்லா இருந்தாலே அடுத்த ஹிண்டஸ்ட்ரி ஹிட் லோடிங் என ரசிகர்கள் சொல்லி வரும் நிலையில், அதற்கு ஏற்றவாறே படத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
படம் தொடங்கியதுமே நந்தினி மற்றும் ஆதித்த கரிகாலனின் சின்ன வயது காதல் காட்சிகள் தான். குளத்தில் இருந்து கவர்ச்சி உடையில் தெய்வத்திருமகள் படத்தில் குட்டி பாப்பாவாக நடித்த சாரா அர்ஜுன் எழுந்து வரும் போதே ரசிகர்கள் டெம்ப்ட் ஆகி விடுகின்றனர்.
அதன் பிறகு கமல்ஹாசன் குரலில் மீண்டும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் விட்ட இடத்தில் படம் தொடங்குகிறது. கடலில் விழுந்த அருண்மொழியை ஊமை ராணி காப்பாற்றினாலும் சோழ தேசத்துக்கு அவர் இறந்து விட்டார் என்றே செய்தியை அனுப்புகின்றனர்.

#image_title
அருண்மொழி மாண்டு விட்டான் அடுத்து ஆதித்த கரிகாலனையும் முடித்து விட்டால் அரியணையை பாண்டியர்கள் கைப்பற்றி விடுவர் என நந்தினி ஒரு பக்கம் சூழ்ச்சி செய்து வர, மதுராந்தகன் தனக்கு மணிமகுடம் வேண்டும் என சிற்றரசர்களையும் சிவயோகிகளையும் திரட்டி அவர் ஒரு பக்கம் சூழ்ச்சி செய்து வருகிறார்.
கடம்பூர் மாளிகைக்கு வரும் ஆதித்த கரிகாலன் நந்தினி கையால் கொல்லப்படுகிறாரா? புத்த மடத்தில் மறைந்திருக்கும் பொன்னியின் செல்வன் மகுடம் சூடினாரா? மதுராந்தகனிடம் உள்ள ரகசியம் என ஏகப்பட்ட ட்விஸ்ட்களை வைத்து இயக்குநர் மணிரத்னம் ப்ரீ கிளைமேக்ஸ், கிளைமேக்ஸ் என பிரிந்து மேய்ந்துவிட்டார்.
பொன்னியின் செல்வன் 2 ஆரம்பத்தில் 15 நிமிடங்கள் விறுவிறுவென சென்ற நிலையில், கொஞ்சம் தொய்வடைகிறது. அதன் பின்னர், மீண்டும் வேகம் பிடிக்கும் படம் நம்மையும் அந்த உலகத்துக்குள் கொண்டு செல்கிறது.
வந்தியத்தேவன் ரவிதாசன் ஆட்களிடம் சிக்கிக் கொள்வது, ஆழ்வார்க்கடியான் சாமியார் வேஷம் போட்டு வந்து காப்பாத்துவது. குந்தவையுடன் அகநக பாடலில் அழகிய காதல் என ஃபிரேம் பை ஃபிரேம் மாஸ் காட்டி இருக்கிறார் மணிரத்னம்.
ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை, ரவி வர்மாவின் அழகு ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் என கர்ஜிக்கிறது இந்த பொன்னியின் செல்வன் 2.
ரேட்டிங்: 4/5.