இந்தியா
தொடர்ந்து உயரும் தங்கம் விலை: சென்னையில் இன்றைய விலை என்ன?

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக குறைந்து கொண்டே வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து மீண்டும் தங்கம் வாங்க தொடங்கினர். ஆனால் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 24 காரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு கிராம் 4746 ஆகவும் ஒரு சவரன் விலை 37,968 எனவும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 4387 எனவும், ஒரு சவரன் தங்கம் 35,096 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை மீண்டும் 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் போல வெள்ளியின் விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது சென்னையில் இன்றைய வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.72.10 எனவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 72,100 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாகவே தங்கம் வெள்ளி விலை உயர்ந்து கொண்டிருப்பதாக தங்க நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.





