இந்தியா
கொரோனா பரவல் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுமா? ரயில்வே துறை அறிவிப்பு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. குறிப்பாக ஒரு சில மாநிலங்களிலும் முக்கிய நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் தமிழகத்தை பொருத்தவரை போக்குவரத்து துறையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி கொரோனா பரவல் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
அனைத்து ரயில்களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிக கூட்டம் இருந்தால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருந்தாலும் ரயில்கள் ரத்து செய்யப்படாது என்றும் எனவே கடந்த முறை மாதிரி இந்த முறை புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



















