தமிழ்நாடு
கிராமுக்கு ரூ.14 விலையேறிய தங்கம்: இன்றைய சென்னை விலை என்ன தெரியுமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் சர்வதேச சந்தையில் உள்ள தங்கத்தின் விலையை பொருத்து சென்னையிலும் விலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது என்பதையும் தினமும் பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் சென்னையில் தங்கம் இன்று கிராம் ஒன்றுக்கு ரூபாய் 14 விலை உயர்ந்துள்ளது தங்க நகை பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்னும் சில நாட்கள் தங்கம் விலை உயர வாய்ப்பு இருப்பதாக நகை கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
சென்னையில் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.4507.00 என்ற விலையில் விற்பனை ஆகிஅ நிலையில் இன்று 14 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4521.00 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே போல் தங்கத்தின் விலை நேற்று ஒரு சவரன் ரூபாய் 36056.00 என்ற விலையில் விற்பனை ஆகி வந்த நிலையில் இன்று சவரன் விலை 112 ரூபாய் உயர்ந்து ரூபாய் ரூ.36168.00 என்ற விலையில் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் சுத்தமான 24 காரட் தங்கத்தின் விலை சென்னையில் இன்று ஒரு கிராம் ரூபாய் 4881.00 என்றும் ஒரு சவரன் விலை ரூபாய் 39048.00என்றும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.,
சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதும் சென்னையில் நேற்றைய விலையான ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 73.80 என்ற விலையிலும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய் 73,800 என்ற விலையிலும் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




















