Connect with us

இந்தியா

அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு!

Published

on

அகமதாபாத் விமான விபத்தில் விஜய் ரூபானி உயிரிழப்பு – குஜராத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!

குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா AI 171 பயணிகள் விமானம் இன்று மதியம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் பகுதியில் விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் மொத்தம் 242 பேர் பயணித்தனர். இதில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி (வயது 68) அவர்களும் அடங்கியிருந்தார். அவர் தனது மகனை சந்திக்க லண்டன் பயணமாகச் சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் படுகாயமடைந்த விஜய் ரூபானி அருகிலுள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல், அவர் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) மற்றும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றன. பல பயணிகள் நிலைமை இன்னும் உறுதியில்லை என்பதோடு, உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

விஜய் ரூபானியின் மரணம் குஜராத் மற்றும் தேசிய அரசியலில் பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

Translate »
Strong contextual links.