இந்தியா
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து – 242 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் வீழ்ந்த பரபரப்பு!

ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வீழ்ச்சி – 242 பேரின் உயிருக்கு அபாயம்!
குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.
AI 171 என்ற விமானம், மதியம் 1:38 மணியளவில் புறப்பட்ட ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ஆமதாபாத்தில் உள்ள மேகானி நகர் பகுதியில் உள்ள மருத்துவர்களுக்கான விடுதியின் அருகே மோதியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விபத்தில் மொத்தம் 242 பேர் பயணித்தனர். இதில் 230 பயணிகள், 10 விமான பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் உள்ளனர்.
விபத்து நேர்ந்த உடனடியாக, காவல்துறை, தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புப் படைகள் விரைந்து சம்பவ இடத்தை வந்தடைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெளியிட்ட தகவலின்படி, விபத்து தொடர்பான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. தற்போது உயிரிழப்பு தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.


