உலகம்
சூயஸ் கால்வாயில் மீண்டும் எவர் கிவன் கப்பல்.. நடந்தது என்ன?

2021-ம் ஆண்டு மார்ச் மாதம் சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட எவர் கிவன் கப்பல், உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மத்திய தரைக் கடலிலிருந்து இருந்து செங்கடலுக்கு ஆப்ரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டும். அதை தவிர்க்க உருவாக்கப்பட்டது தான் சூயஸ் கால்வாய். இதனால் ஒவ்வொரு கப்பல் நிறுவனங்களுக்குக் கோடிக் கணக்கில் செலவுகள் மிச்சமாகும். இந்த கால்வாயில் எவர் கிவன் கப்பல் சிக்கிக்கொண்டததை அடுத்து இரண்டு பக்கமும் சரக்கு கப்பல்கள் வரிசையாக நின்றுகொண்டு இருந்தன.
6 நாட்கள் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட இழப்பு மற்றும் அபராதத்தை சூயஸ் கால்வாய் ஆணையத்துக்குச் செலுத்திய பிறகு கப்பல் விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்திலிருந்து சீனாவுக்குச் சரக்குகளுடன் மீண்டும் எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக வந்துள்ளது.
அதை உஷாராக எதிர்கொண்ட சூயஸ் கால்வாய் ஆணையம், எவர் கிவன் கப்பலை கவனமாக வழியனுப்பி வைத்துள்ளது.