இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.04.2026

- வாணியம்பாடி தவெக வேட்பாளர் சையது புர்வறானுதீனுக்கு சென்னை வடக்க ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன். – 4 முறை ஆஜராகாத்தால் 5 வது முறையும் சம்மன் அனுப்ப்ப்பட்டுள்ளது. 140க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி அரசுக்க ரூ.600 கோடி இழப்பு ஏற்படுத்திய புகாரில் கைதான ஜீனைத் அகமதுவின் செல்போன்களை ஆய்வு செய்த்தில் மோசடியில் சையத புர்வறானுதீனுக்கும் தொடர்பு இருந்த்து தெரிய வந்துள்ளது.
- இன்று பிற்பகலில் தங்கம் விலை மீண்டும் ரூ.200 குழறைந்து கிராம் ரூ.13750க்கம் சவரன் ரூ.110000க்கும் விற்பனை ஆகிறது.
- சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் தண்டனை அறிவிப்பு வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு!
- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்பில் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த ஏஜென்சி தேவை என டெண்டர் வெளியீடு. – குரங்குகளை விரட்ட கையாள சுமார் 100 பேரை அந்த ஏஜென்சி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய கிழக்குப் போரால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, 41 பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கான இறக்குமதி வரியை ஜூன் 30 வரை ரத்து செய்து ஒன்றிய அரசு உத்தரவு!
- தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு டிஜிபி ஆக சந்தீப் ராய் ரதோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு.











