சினிமா செய்திகள்
சூர்யாவுக்காக அனிருத், ஜிவி பிரகாஷின் ‘வாடா தம்பி’ பாடல்!

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டி இமான் கம்போஸ் செய்த இந்த பாடலை அனிருத் மற்றும் ஜிவி பிரகாஷ் முதல் முதலாக இணைந்து பாடியுள்ளனர் என்பதும், இந்த பாடலை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ’வாடா தம்பி’ என்று தொடங்கும் இந்த பாடல் அனைவரையும் கவரும் என்றும் குறிப்பாக இளைஞர்களை மிகப்பெரிய அளவில் கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.