Connect with us

தமிழ்நாடு

’சொந்த அண்ணனுக்கே உதவாத ஸ்டாலின் மக்களுக்கு உதவுவாரா?’- முதல்வர் கேள்வி

Published

on

’சொந்த அண்ணனுக்கே உதவாத ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு எப்படி உதவுவார்?’ என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பல அரசியல் கட்சித் தலைவர்களும் தற்போது பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பிரசார சுற்றுப்பயணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார்.

கோவை சத்தியமங்கலம் பகுதியில் இன்று முதல்வர் தனது பிரசாரத்தை மக்கள் மத்தியில் நடத்தினார். முதல்வர் பழனிசாமி கூறுகையில், “ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் தான் ஸ்டாலினும் அழகிரியும். ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணனுக்கு கட்சியில் இடம் தர மறுக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் நாட்டு மக்களுக்கு என்ன செய்து விடுவார் ஸ்டாலின்? திமுக என்பது ஒரு கார்ப்ரேட் நிறுவனம். அந்த கார்ப்ரேட் நிறுவனத்தின் சேர்மன் ஆக இன்று ஸ்டாலின் இருக்கிறார். நாளை அந்தப் பதவிக்கு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் வருவார்.

மேற்படி, திமுக-வில் உள்ளவர்கள் அனைவரும் ரெளடிகள். ஆனால், அதிமுக-வில் உள்ள அனைவரும் விவசாயிகள். முன்னர் கோவையில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்திய போது அவர்களை சுட்டுக் கொன்றவர்கள் திமுக-வினர். விவசாயியைக் கொலை செய்பவர்கள். ஏழை மக்களுக்கும் விவசாய மக்களுக்கும் உதவும் கட்சி அதிமுக. நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலம் ஆக பல நிலைகளில் இருப்பதற்குக் காரணம் அதிமுக தான். அனைத்து துறைகளிலும் விருதுபெற்ற ஒரே மாநிலம் ஆக தமிழகம் உள்ளது. கிராமங்களில் ஏழை மக்களுக்கு குடிநீர் இணைப்பு, மலைப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை, பொங்கல் பரிசாக ஆக அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்குகிறோம்.

ஆனால், ஸ்டாலின் அதிமுக-வில் வெறும் ஊழல் மட்டும் இருப்பதாக எப்போதும் குற்றம் சுமத்தி வருகிறார். இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. நான் சவால் விடுகிறேன். அதிமுக அரசில் எந்தெந்த துறையில் என்னென்ன ஊழல் நடந்து உள்ளது? நான் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் ஸ்டாலினால் பதில் சொல்ல முடியுமா? நான் முதல்வர் பதவியை ஏற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்குள் எத்தனை முறை ஆட்சியைக் கலைக்க நினைத்தார்? எத்தனை முறை கட்சியை உடைக்க நினைத்தா? ஆனால், ஸ்டாலினின் அத்தனை முயற்சிகளையும் மக்களாகிய உங்கள் துணையோடு தகர்த்தி நாட்டிலேயே சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம்” எனப் பேசினார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா17 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா4 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா4 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா6 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

Translate »
To renew : sign in, open. Drivers searching for a nearby tow truck after a breakdown, accident, no start or unsafe vehicle condition.. run emigration 2026 | sportsam events.