தமிழ்நாடு
பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: எச்சரித்த டிடிவி தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாள் இன்று. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அமமுக மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு என்னுடைய பிறந்தநாளுக்கு ஒரு சின்ன விளம்பரம் வாழ்த்து என எதுவுமே கூடாது என மிகவும் கண்டிப்புடன் உத்தரவு போட்டியிருக்கிறார்.
சென்றமுறை தனது பிறந்தநாளை ஆர்கே நகர் தொகுதிவாசிகளுடன் கேக் வெட்டிக்கொண்டாடிய டிடிவி தினகரன் இந்தமுறை எந்த காரணத்தையும் சொல்லாமல் பிறந்தநாள் கொண்டாட்டம், விளம்பரம் எதுவும் கூடாது என எச்சரித்துள்ளது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளதாக வரும் தகவலால் அப்செட்டில் உள்ளதாகவும், அதனால் அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்ததாக சில தகவல் உலாவருகிறது. மேலும் சமீபத்தில் திடீரென மரணமடைந்த மூக்குபொடி சாமியாரின் மரணம் தினகரனை மேலும் பாதித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தினகரனிடம் இருந்து ஏதாவது அறிவிப்பு அவரது பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த அவரது தொண்டர்களுக்கு தினகரனின் இந்த எச்சரிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.














