Connect with us

டிவி

சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பெரும் 1 நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published

on

ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 நிகழ்ச்சியை, இந்த வாரம் முதல் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். அதற்காகச் சிம்பு எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்ற தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். தொடர்ந்து ஸ்டார் குழுமத்திக்கு சொந்தமான டிஸ்னிப் ஹாட்ஸ்டார் + ஓடிடி தளத்திலும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமல் ஹாசன் கடந்த சில வாரங்களாகத் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தை பெரும் தொகை கொடுத்து வங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
கமல் ஹாசனும் படத்தை நடித்து முடித்துத் தராமல் உள்ளார். அதனால் ஸ்டார் குழுமம் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே துரிதமாக விக்ரம் படத்தை முடித்து ரிலீஸ் செய்யுமாறு கமல் ஹாசனிடம் கோரிக்கை வைத்தது.
அதனை தொடர்ந்து சென்ற வாரம் பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய, தான் இந்த வாரத்துடன் இந்த நிகழ்ச்சியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறுகிறேன். வேறு ஒருவர் நிகழ்ச்சியை அடுத்த வாரம் முதல் தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டது.
முன்னதாக தெலுங்கில் நாகரஜூனாவுக்கு பதிலாகவும், கமல் ஹாசனுக்கு கொரோனா பாதித்து இருந்த போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி இருந்தார். எனவே அவர் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைத் தொடருவார் என கூறப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கமலுக்கு அடுத்ததாகச் சிம்பு தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டு வந்தது. அது போலவே சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இந்த வாரம் முதல் தொகுத்து வழங்குகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் இரண்டு நாட்கள் தொகுத்து வழங்குவார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ஒரு நாள் மட்டுமே தொகுத்து வழங்குவார். அதே போல சிம்புவும் ஒருநாள் தான் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார். ஆனால் கூடுதலாக ஒரு வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நீட்டிக்கப்பட உள்ளதாகவும், சுரேஷ் தாதா மற்றும் கேபிஒய் தீனா இருவரும் வைல்டு கார்டு எண்ட்றியாக உள்ளே செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சரி இப்போது தலைப்புக்கு வருவோம். கமல் ஹாசன் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க 2 நாட்களுக்கு 3.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். அதில் பாதி அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிம்புவுக்கு ஒரு நாளுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். சிம்பு இன்னும் 5 அல்லது 6 நாட்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். சிம்பு முதன் முறையாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாலும், கமல் போல இல்லாமல் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படித் தொகுத்து வழங்கப் போகிறார். சிம்புவால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைப் பார்வையாளர்கள் எப்படி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு இடையில் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கான படப்பிடிப்பு நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பிப்காஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முழுவதும் நேரலை என்றாலும், கமல் வரும்நாட்கள் ரெக்கார்டு செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. அதே போல சிம்பு வரும் நாட்களும் நடைபெறும் என கூறப்படுகிறது.
வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?