வேலைவாய்ப்பு
பார்ட்-டைம் வேலை செய்து ஒரு மணி நேரத்தில் ரூ.140 சம்பாதிக்கலாம்: அமேசான்

பார்ட்-டைம் வேலை பார்த்து ஒரு மணி நேரத்தில் ரூ.120 முதல் ரூ.140 வரை சம்பாதிக்க வேண்டுமா? இதோ உங்களுக்கு அமேசான் வழங்கும் அறிய வாய்ப்பு.
ஆன்லைன் ஈ-காமர்ஸ் சேவை நிறுவனமான அமேசான், அமேசான் ஃப்ளக்ஸ் என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை மூலமாக அமேசான் ஃப்ளக்ஸ் ஆப் மூலம் பார்ட்-டைம் டெலிவரி பாயாக இளைஞர்கள் இணைந்து செயல்பட முடியும்.
மேலும் குறிப்பிட்ட நேரத்தில் தான் வேலை என்றில்லை. தங்களுக்கு விருப்பம் உள்ள போது இந்த செயலி மூலம் டெலிவரி சேவையைத் தொடங்க முடியும். ஒரு மணி நேரத்திற்கு 140 ரூபாய் வரையிலும் சம்பாதிக்கவும் முடியும்.
ஆனால் முதற்கட்டமாகப் பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் மட்டுமே அமேசான் ஃபிளக்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் பிற நகரங்களிலும் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த வேலை வேண்டும் என்றால் கண்டிப்பாக கையில் ஒரு ஸ்மார்ட்ஃபோன் ஒன்றையும் வரித்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.










