தமிழ்நாடு
திமுகவின் ஊழல் பட்டியல்: அண்ணாமலை வெளியிட்ட DMK Files…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரஃபேல் வாட்சு விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் பில்லோடு திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அண்ணாமலை கூறியிருந்தார். மேலும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் கூறியிருந்தார்.

#image_title
இந்நிலையில் இன்று காலை அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் DMK Files என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், சபரீசன் என குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், நாளை காலை 10:15 மணிக்கு ஊழல் பட்டியல் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த அறிவிப்பால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதனையடுத்து #DMKFiles என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் வைரலாகி வருகிறது. அதே நேரய்த்தில் நாளைய தினம் ரஃபேல் வாட்ச் பில் வெளியிடப்படுவது குறித்தான எந்த அறிவிப்பும் இன்றைய டுவிட்டர் பதிவில் இடம்பெறவில்லை.