சினிமா
ஆஸ்கருக்காக கோடிக்கணக்கில் செலவு செய்த ராஜமெளலி?

இயக்குநர் ராஜமெளலி ஆஸ்கர் விருதக்காக கோடிக் கணக்கில் செலவு செய்துள்ளதாக தகவல் வழியாக உள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டப் பல நட்சத்திரங்கள் நடிப்பில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் வெளியானது. பான் இந்தியா படமாக உருவான இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ஆயிரம் கோடியை கடந்து வசூல் செய்து சாதனை படைத்தது. இது மட்டுமில்லாமல், பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கு கொண்டு விருதுகளை வென்றது.

Rajamouli
இந்த நிலையில் இந்த வருடம் நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இந்திய அரசு சார்பில், ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் அனுப்பப்படாத நிலையில் ராஜமௌலி இந்த படத்தை அயல் நாட்டு மொழி சார்ந்த படங்கள் பிரிவில் அனுப்பினார். மேலும், இது ஆஸ்கருக்கு அடுத்ததாக பார்க்கப்படும் கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றது. சிறந்த பாடலுக்காக ‘நாட்டு நாட்டு’ பாடல் மற்றும் அதனை இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோருக்கு விருது கிடைத்தது.
மேலும் ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருது விழாவிலும் ஐந்து விருதுகளை இந்த படம் வென்றது. சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த சண்டை பயிற்சி, சிறந்த ஆக்ஷன் திரைப்படம், சிறந்த பாடல் மற்றும் சிறந்த ஸ்பாட்லைட் திரைப்படம் என ஐந்து பிரிவுகளில் விருது பெற்றது இந்த திரைப்படம்.
இந்த நிலையில் ஆஸ்கர் விருதுகளை பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் கடந்த சில மாதங்களாக இயக்குநர் ராஜமௌலி ஹாலிவுட் வட்டாரத்தில் முகாமைத்துள்ளார். அங்கு திரைப்படத்தை திரையிட்டு காட்டுவது, விருந்தினர்களை அழைப்பது என இதற்காக கிட்டத்தட்ட 83 கோடி செலவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இவ்வளவு செலவு செய்து விருது வாங்க வேண்டுமா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் இவ்வளவு செலவு செய்வது விருதுக்காக அல்ல தன்னுடைய படத்தை சர்வதேச அளவில் கொண்டு போய் சேர்ப்பதற்காக மட்டுமே என்கிறனர்.
இதனால் இந்திய சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டும் உயரும், சர்வதேச அளவிலும் இந்திய சினிமாவின் மார்க்கெட்டும் உயரும் என்ற நோக்கத்திலேயே ராஜமெளலி இவ்வாறு செய்து வருவதாகவும் தெரிவிக்கிறது படக்குழு வட்டாரம்.