ஆரோக்கியம்
சர்க்கரை நோயாளிகளும் நிம்மதியாக சாப்பிடலாம் பேரீச்சம் பழம் – மருத்துவர்கள் கூறும் உண்மை!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
பேரீச்சம் பழம் இனிப்பு நிறைந்த பழம் என்பதையும் தாண்டி, அதில் உள்ள ஊட்டச்சத்து அற்புதமானது. பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு போன்ற அத்தியாவசிய சத்துக்கள் பேரீச்சையில் நிறைந்துள்ளன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஃபினோலிக்ஸ் மற்றும் ஃப்ளேவனாய்டு போன்ற பைட்டோகெமிக்கல்களும் அடங்கியுள்ளன. நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் செரிமானத்தை சீர்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மூளை, இதயம், எலும்பு உள்ளிட்ட உறுப்புகளுக்கும் பேரீச்சம் பெரும் பலன் தருகிறது.
ஆனால், அதிக இனிப்பு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் பேரீச்சையைத் தவிர்த்து விடுவார்கள். “இது முற்றிலும் தவறான நம்பிக்கை” என்கிறார் இரைப்பை மற்றும் குடல் நிபுணர் டாக்டர் ஜோசப் சல்ஹப். அவர் பகிர்ந்த விளக்கத்தில், 100 கிராம் பேரீச்சையில் சுமார் 54 கிராம் சர்க்கரை இருந்தாலும் கூட, அது இரத்த சர்க்கரை அளவை ஆபத்தான அளவுக்கு உயர்த்தாது எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம், பேரீச்சையின் குறைந்த கிளைசமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) ஆகும். உணவுகளில் இருக்கும் கிளைசமிக் இண்டெக்ஸ், இரத்தத்தில் சர்க்கரை எவ்வளவு விரைவாக உயர்கிறது என்பதைக் காட்டும். GI குறைவாக உள்ள உணவுகள், குறிப்பாக பேரீச்சை போன்றவை, சர்க்கரை நோயாளிகளுக்கும் பாதுகாப்பானவை.
மேலும், பேரீச்சையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குவதால், குளுக்கோஸ் மெதுவாக உடலில் கலக்கிறது. அதோடு, பேரீச்சையில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்டுகள் மற்றும் கனிமச் சத்துகள் கூடுதல் ஆரோக்கியத்தை வழங்குகின்றன.
எனவே, பேரீச்சையின் இனிப்பு சுவை என்பது எதிரி அல்ல; அது நம் குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை வைத்தியம் என்கிறார் மருத்துவர்கள்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.















