தமிழ்நாடு
தருமபுரியில் அடுத்தடுத்து 11 வாகனங்கள் மோதி விபத்து.. 4 பேர் பலி!
Published
2 years agoon
By
Tamilarasu
தருமபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மின் டெம்போ, கார் மோதி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து இந்த வாகனங்களுக்கு பின்னால் வந்த 11 வாகனங்கள் மற்றும் கெண்டெய்னர் லாரியும் மோதி மிகப் பெரிய விபத்தாக உருவாகியுள்ளது.
விபத்தின் சம்பவ இடத்திலேயே 4 நபர்கள் இறந்ததாக உறுதியளிக்கும் தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தில் பைக்கில் சென்ற ஒருவரும் அடக்கம். அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
முக்கிய தேசிய நெடுஞ்சாலை என்பதால், நெடுந்தொலைவிற்கு வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றுள்ளன. மீட்பு பணியில் காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்துக்குத் தருமபுரி மாவட்ட ஆட்சியர் விரைந்துள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் அது ஒரு இறக்கமான பகுதி என்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் இது மிகப் பெரிய விபத்தாக உள்ளது.
You may like
-
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் நடுவானில் மோதல்.. விமானி உயிரிழப்பு!
-
கார் பானெட்டில் தொங்கிய முதியவர்… 8 கிமீ இழுத்து சென்ற கொடூர டிரைவர்!
-
டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த பெண்.. உடன் சென்ற தோழியின் திடுக்கிடும் வாக்குமூலம்
-
10 நிமிடத்தில் வந்துவிடுவேன்.. அம்மாவிடம் பேசிய சிறிது நேரத்தில் பரிதாபமாக பலியான இளம்பெண்!
-
பள்ளி பேருந்து விபத்து.. மாரடைப்பால் உயிரிழந்த 12 வயது மாணவன்!
-
அண்ணாமலை எச்சரிக்கை எதிரொலி: பட்டினபிரவேச நிகழ்ச்சிக்கு முதல்வர் அனுமதி!