சினிமா செய்திகள்
தனுஷ் – செல்வராகவன் – யுவன் கூட்டணி.. ‘நானே வருவேன்’ செம்ம அப்டேட்!

நடிகர் தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் நானே வருவேன் படத்தின் பாடல் கம்போஸிங் யுவன் இசையமைப்பில் தயார் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
செல்வராகவன் தனுஷை வைத்து 10 ஆண்டுகளுக்கு முன்பு மயக்கம் என்ன என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதை தொடர்ந்து அண்ணன் தம்பி கூட்டணியான இவர்கள் எப்போது இணைவார்கள் என நீண்ட காலமாக இவர்களது ரசிகர்கள் எதிர்பார்ப்பிலிருந்து வந்தனர்.
சில வருடங்களுக்கு முன்பு செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகத்தில் தனுஷ் நடிப்பார் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. அந்த போஸ்டர் ஹாலிவுட் படத்தின் காப்பி எனவும் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் கலைப்புலி தானு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் யுவன் இசையில் நானே வருவேன் என்ற படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் பாடல் கம்போஸிங் முடிவடைந்துள்ளதாகப் படத்தின் இயக்குநர் செல்வராகவன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தானு இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
மேலும் நானே வருவேன் படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் விரைவில் வரும் என கலைப்புலி தானு தெரிவித்துள்ளார்.
An exciting update you all waited for #NaaneVaruven album has been completed, more surprises coming soon! @dhanushkraja @selvaraghavan @thisisysr https://t.co/KQnBodZ9J1
— Kalaippuli S Thanu (@theVcreations) January 31, 2022
தனுஷ் நடிப்பில் விரைவில் மாறன் என்ற படம் ரிலீஸ் ஆக உள்ளது. தொடர்ந்து ஹாலிவுட் படம் தி கிரே மென், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். 2022-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.