கிரிக்கெட்
டெல்லி கேபிடல் டாஸ் வென்று எடுத்த அதிரடி முடிவு:

ஐபிஎல் தொடர் போட்டியில் இன்று 22வது போட்டி பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நடைபெற்ற உள்ளது. இந்த போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து பெங்களூர் அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் ஆகிய இரண்டு அணிகளும் ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றியும் ஒன்றில் தோல்வியடைந்து 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ரன்ரேட் அடிப்படையில் டெல்லி இரண்டாவது இடத்தையும் பெங்களூர் மூன்றாவது இடத்திலும் உள்ள நிலையில் இன்று வெற்றி பெறும் அணி 10 புள்ளிகள் பெற்று விடும் என்பதால் முதல் இடத்தைப் பெற்றுவிடும்.
Hello & good evening from Ahmedabad for Match 22 of the #VIVOIPL ????
Toss Update: @DelhiCapitals have won the toss and will bowl first.
Follow the game ???? https://t.co/NQ9SSSBbVT#DCvRCB #VIVOIPL pic.twitter.com/3O2DvPhlPi
— IndianPremierLeague (@IPL) April 27, 2021
எனவே இன்று போட்டி முடிந்ததும் சென்னை அணி 2-வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடதக்கது. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.














