சினிமா
96 படத்தில் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட படக்குழு: ஜானுவுக்கு ராம் கொடுத்த சர்ப்ரைஸ்! (வீடியோ இணைப்பு)
Published
4 years agoon
By
caston
சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த 96 திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை பெற்ற திரைப்படம் 96 திரைப்படம். இந்த படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது.
பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதலுக்கு பின்னர் இருபது ஆண்டுகள் கழித்து சந்தித்துக்கொள்ளும் காதலர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை அழுத்தமான காட்சிகளின் மூலம் உணர்வுப்பூர்வமாக 96 திரைப்படத்தில் சொல்லியிருப்பார் இயக்குநர். இதில் த்ரிஷாவின் கதாப்பாத்திரமான ஜானு கதாப்பாத்திரம் மிகவும் அழகாக செதுக்கப்பட்டிருக்கும்.
அதில் ஜானகியின் பாடல்களை மட்டும் பாடும் ஜானுவை ராம் பாடகி ஜானகி தேவியின் வீட்டுக்கு சர்ப்ரைஸாக அழைத்துச்சென்று அவர் முன்னிலையில் பாட வைக்கும் காட்சி ஒன்று படத்தில் இருந்து நீக்கியிருந்தனர் படக்குழுவினர். அந்த காட்சி இருந்திருந்தால் படத்தின் உணர்வு ஓட்டம் சற்று விலகி அந்த காட்சி மட்டும் தனித்து தெரிந்திருக்கும் என்பதால் அதனை நீக்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்த காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
You may like
-
சுந்தர் சி வலையில் சிக்கிய அடுத்த ஆடு; பாவம் விஜய்சேதுபதி ரூட் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு?
-
பக்கவா இருக்காரே விஜய்சேதுபதி; தி ஃபேமிலி மேன் இயக்குநர்கள் இயக்கி உள்ள வெப்சீரிஸ் விரைவில் வருது!
-
அரசியலில் குதிக்கின்றாரா நடிகை த்ரிஷா?
-
அஜித், விஜய் சம்பளத்தை நெருங்கிய விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன்!
-
35 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு மெளனப்படம்: விஜய்சேதுபதி நடிக்கின்றார்
-
மீண்டும் ஒரே படத்தில் இணையும் விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதிராவ் ஹைத்ரி!