Connect with us

தமிழ்நாடு

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை ரத்து: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் சனிக்கிழமை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதும் இதனால் பல நாட்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

school இந்த நிலையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடுசெய்வதற்காக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது.

இதன் காரணமாக வரும் 3ஆம் தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அல்ல என்றும் அன்றைய தினம் பள்ளிகள் இயங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை அலுவலர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தொடர் மழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் டிசம்பர் 3ஆம் தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படவேண்டும் என அறிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா33 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized6 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Built for educators : the same economics as our gumroad alternative, with webinar funnels and coaching programs supported too..