ஆன்மீகம்
கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கோதானத்தின் அதிர்ஷ்ட பலன்கள்!

நாட்டின் பெரும்பாலான மக்களை களைப்பூட்டும் முக்கியமான பிரச்சனை ஒன்றாக கடன் சுமை காணப்படுகிறது. வங்கிகள் கடன்களை எளிதாக வழங்குவதால், அவற்றைப் பயன்படுத்தி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர். ஆனால் கடன்களை அடைப்பதில் பலர் வாழ்நாள் முழுவதும் போராட நேரிடுகிறது.
தினசரி வாழ்க்கைக்கே கடனில் நம்பிக்கையாய் இருக்கும் நிலையில், ஆன்மீக நம்பிக்கைகள் ஒரு தீர்வாக கருதப்படுகின்றன. அந்தவகையில், ஜோதிட சாஸ்திரத்தில் பசு தானம் (கோ தானம்) என்பது மிகுந்த புண்ணியத்தைக் கொண்டதாக கூறப்படுகிறது. இது கடன் பிரச்சனைகளைத் தீர்க்கும் முக்கியமான பரிகாரமாக பரிந்துரைக்கப்படுகிறது.
கோ தானத்தின் ஆன்மீக முக்கியத்துவம்:
பசுவின் ஒவ்வொரு உறுப்பிலும் தேவதைகள் வசிக்கின்றனர் என நம்பப்படுகிறது:
கொம்பில் பிரம்மா, விஷ்ணு
தலையில் மகாதேவன், நெற்றியில் கௌரி
கண்களில் சூரியன், சந்திரன்
தொண்டையில் இந்திரன்
குளம்புகளில் கந்தர்வர்
சாணத்தில் யமுனை, கோமியத்தில் கங்கை மற்றும் மேலும் பல தெய்வீக சக்திகள்.
யார் பசு தானம் செய்யலாம்?
பசுவை நன்றாக பராமரிக்கக்கூடிய நபர்களே இதனை தானம் செய்யலாம்.
பசு முழு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
கன்றுடன் இருக்க வேண்டும் (முதல்கன்றாக இருந்தால் சிறந்தது)
நோயற்ற, முழு உறுப்புகள் கூடிய பசு இருக்க வேண்டும்
பசு தானம் செய்ய ஏற்ற நாள் மற்றும் நேரம்:
சித்திரை மாதத்தில், வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதியில், விரதம் இருந்து கோதானம் செய்யலாம்.
இது கடன் பிரச்சனைகளைத் தீர்த்து, மோட்சம் பெற வழிவகுக்கும்.
கோ தானத்தின் பலன்கள்:
கிருஷ்ண பக்தி அதிகரிக்கிறது
பாவங்கள் விலகி, வம்ச தழைக்கும்
நிதி பிரச்சனைகள் குறையும்
7 தலைமுறைக்கும் மோட்சம் கிடைக்கும்
சுபகாரியங்கள் வெற்றியடையும்
