இந்தியா
டியூஷன் அனுப்பிய பெற்றோர்.. போலீசிடம் மாட்டிவிட்ட சிறுவன்!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பஞ்சாபில் டியூஷனுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் காவல் துறையினரை அழைத்து வந்த வீடியோ இணையத்தில் வைராகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், ஊரடங்கைப் பின்பற்றாத சிறுவனின் பெற்றோர்கள், டியூஷன் அனுப்பியுள்ளனர். அதை பொறுத்துக்கொள்ள முடியாத சிறுவன் காலர்களிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் சிறுவனை அழைத்துக்கொண்டு டியூஷன் எடுத்த ஆசியரின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது டியூஷன் எடுத்தது உன்மை தான்.
ஆனால், முதலில் தான் டியூஷன் எடுக்க மறுத்ததாகவும், பெற்றோர்கள் வற்புறுத்தியதன் பேரில் ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் டியூஷன் எடுத்த ஆசிரியர், மற்றும் பெற்றோர்களுக்கு கோரோனாவின் பாதிப்பு குறித்த எச்சரிக்கை மற்றும் அறிவுரையை வழங்கிவிட்டு சென்றுள்ளனர்.

















