Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

கிரெடிட் கார்டுகள் மூலம் ரு.1 லட்சம் செலவு செய்தால் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா?

Published

on

கிரெடிட் கார்டு மூலம் ஒரு லட்சம் அல்லது அதற்கு மேல் செலவு செய்யும் வாடிக்கையாளர்கள் மீது வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கிரெடிட் கார்டு என்பது தற்போது பலரின் தேவையாக உள்ளது என்பதும் கிரெடிட் கார்ட் மூலம் செலவு செய்து விட்டு ஒரு மாதம் கழித்து வட்டி இல்லாமல் அந்த தொகையை செலுத்திக் கொள்ளும் வசதியை பலர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் கிரெடிட் கார்டு முலம் செலவு செய்த தொகையை கட்டவில்லை என்றால் அதற்கு வட்டி மேல் வட்டி கட்ட சொல்லி வங்கி நம்முடைய பணத்தை கறந்து விடுவார்கள் என்பதால் கிரெடிட் கார்டை முடிந்தவரை வாங்காமல் இருப்பது நல்லது என்றும் அப்படியே வாங்கினாலும் சரியான தேதியில் செலவழித்த தொகையை கட்டி விட வேண்டும் என்றும் ஆலோசனையாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கிரெடிட் கார்டு மூலம் ஒரு லட்சம் அல்லது அதற்கு மேல் செலவழித்தால் வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வெகுமதி புள்ளிகள் மற்றும் கேஷ் பேக் மூலம் பலன் பெறுகின்றனர் என்றும் இதனால் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பெரிய வர்த்தனைகள் செய்யும் வாடிக்கையாளர்களை கண்காணிக்க வருமானவரித்துறை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிரெடிட் கார்டு என்பது ஒரு மின்னணு பணம் செலுத்தும் ஊடகம் என்பதால் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் கணினியில் பதிவு செய்யப்படும் என்றும் அதனால் பெரிய பரிவர்த்தனை வருமானவரித்துறைக்கு எளிதில் தெரியும் என்றும் கூறப்படுகிறது. கிரெடிட் கார்டு பில்கள் ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேல் தாண்டும் வாடிக்கையாளர்கள் அதேபோல் 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் தாண்டும் வாடிக்கையாளர்கள் பெயர் மற்றும் விவரங்களை தகவல் தொழில்நுட்பத்துறைக்கு வங்கி அனுப்பும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளால் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வாடிக்கையாளரை அழைத்து விளக்கம் கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் கிரெடிட் கார்டு மூலம் அதிகமாக செலவு செய்யும் வாடிக்கையாளர்கள் 61 ஏ என்ற விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. கிரெடிட் கார்டு அதிகமாக செலவு செய்பவர்களை வருமானவரித்துறை கண்காணிக்கும் என்பது உண்மைதான் என்றும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
infinity loaded is not responsible for the content(s) of external sites and comments expressed here does not in any way reflect the opinions of infinity loaded or any employee thereof. local jobs. private jobs.