இந்தியா
மழை வெள்ளம் காரணமாக கங்கையில் புதைக்கப்பட்ட உடல்கள் கரையொதுங்கின- கொரோனாவால் தொடரும் அவலம்!

நாட்டையே புரட்டிப் போட்டு வரும் கொரோனா தொற்று, வட மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தை அதிகம் பாதித்தது.
அங்கு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா தொற்றால் இறந்தவர்களில் பலரது குடும்பங்களுக்கு, மரணமடைந்தவர்களுக்கு முறையான இறுதிச் சடங்கு செய்யக் கூட பணம் இல்லாமல் தவித்து உள்ளனர். இதனால் கங்கை நதியின் கரைகளில் அவர்களைப் புதைத்து விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் பரவலாக மழை பெய்து, கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக நதிக் கரையில் புதைக்கப்பட்ட பிணங்கள், கரை ஒதங்கியுள்ள அவலச் சம்பவம் நடந்துள்ளது.
குறிப்பாக அலாகாபாத் மாநிலத்துக்கு அருகில் உள்ள கங்கை நதிக் கரையில் இப்படி கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் சுமார் 150 பிணங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அப்படி கரை ஒதுங்கிய உடல்கள் முறையாக எரியூட்டப்பட்டு விட்டதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இதுவரை சுமார் 600 உடல்கள் கங்கை கரைகளில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

















