இந்தியா
கேரளாவில் மீண்டும் வாஷ்-அவுட் ஆகிறதா பாஜக..?- கம்யூனிஸ்ட் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை

கேரள மாநிலத்தில் தமிழகத்தைப் போலவே கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, மொத்தம் இருக்கும் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இன்று அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வரை இரண்டு சுற்று முடிவுகள் வந்துள்ள நிலையில், மொத்தம் உள்ள 140 இடங்களில் சுமார் 84 இடங்களில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி முன்னிலைப் பெற்றுள்ளது. ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் இடதுசாரி கூட்டணி முன்னிலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கூட்டணி சுமார் 40 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்டணி 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதனால் இந்த முறை தேர்தலிலும் கேரள மாநிலத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















