Connect with us

இந்தியா

முதலமைச்சர் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

Published

on

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள அணைத்து பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 16.04.2025 புதன்கிழமை மாலை சென்னையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளது என்ற மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டம் அரசிதழில் சனிக்கிழமை (ஏப்.12) வெளியான நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பல்கலைக்கழக வேந்தா் என்ற முறையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் முதல்  ஆலோசனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆலோசனைகளின் சாராம்சம் பின்வருமாறு.

மாணவர்களிடையே சமத்துவத்தையும், சமநீதியையும் கற்பிப்பதுதான் தலையாய கடமையாக இருக்க வேண்டும். பிரிவினையைத் துாண்டக்கூடிய கருத்துக்களுக்கோ, நடவடிக்கைகளுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை. இதில் எந்தவித சமரசங்களையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அறிவியல் தொழில்நுட்பங்களில் உலகம் வேகமாக மாறிவரும் நிலையில், இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நமது பல்கலைக் கழகங்கள் செயல்பட வேண்டும்.

நமது பல்கலைக்கழகங்களில் சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொள்வது ,புதிய உலகத்தரம் வாய்ந்த கல்விமுறைகளை அறிமுகம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாம் வடிவமைக்க விரும்பும் எதிர்கால திட்டமானது பொருத்தமான கல்வி, வேலைவாய்ப்பு, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகிய மூன்று துாண்களை உள்ளடக்கியது. இம்மூன்றும் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் வளரும் தேவைகளுக்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்.

உயர்கல்வியின் தலைமையகமாக தமிழ்நாடு திகழ வேண்டும்.

ஆரய்ச்சி மற்றும் புதுமைக்கான மையங்களாக உயர்கல்வியின் உலகளாவிய தலைமையகமாக தமிழ்நாடு திகழ வேண்டும். தடையற்ற, தரமான, அணைவரும் தலைநிமிரத் தேவையான கல்வியைப் பல்வலைக்கழகங்கள் வழங்க வேண்டும்.

பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறைகள் ஆகியவற்றை மாற்றியமைக்க வேண்டும்.

கல்வி நிலையங்களில் அறிவியல் புர்வமான கருத்துக்களும், கல்வியும் மட்டுமே போதிக்கப்பட வேண்டும். கல்வி நிலையங்களில் எந்த காரணத்தைக் கொண்டும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக் கதைகளையோ தவறியும் மாணவர்களிடம் பரப்பி விடக் கூடாது. கல்வியின் அடிப்படையே அறிவைச் செம்மைப் படுத்துவதுதான்.

நம் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்துச் சான்றிதழ் மட்டும் பெற்றால் போதாது. உலகம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வினை அளிப்பவர்களாக அவர்கள் திகழ வேண்டும். அதற்கு நம் பல்கலைக்கழகங்கள் எதிர்காலத் தேவைகளுக்கேற்ப அப்டேட் ஆக வேண்டும்.

உயர்கல்விக்காக உலக நாடுகளுக்கு நாம் செல்வது போல உலகெங்கும் இருந்து திறமைகளை ஈர்க்கும் கற்றல் தலைமையகமாகத் தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்5 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா3 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா3 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

கட்டுரைகள்2 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
Nordicnodes | professional saas tools for everyone.