தமிழ்நாடு
விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு முதலமைச்சர் இரங்கல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி மேற்கு கிராமத்தில், தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு பொதுநிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இப்படியான சம்பவங்களை தவிர்க்க அனைத்து பள்ளிகளும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.








