இந்தியா
தேர்வுக்கு ஒருசில நிமிடத்திற்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்த 12ஆம் வகுப்பு மாணவர்

தேர்வு எழுதுவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்பாக திடீரென பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் மாரடைப்பால் பள்ளியிலேயே மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
ஆந்திர மாநிலத்தில் தற்போது 12-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவர் சதீஷ் என்பவர் கடந்த சில நாட்களாக தேர்வு எழுதி வருகிறார். அருகில் உள்ள கிராமத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தேர்வு எழுதும் அறைக்கு வந்த அவருக்கு திடீரென மயக்கம் வந்ததாக தெரிகிறது .
தேர்வு அறையில் காத்திருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் மயங்கி விழுந்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து அருகில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தபோது ஏற்கனவே அந்த மாணவர் இறந்து விட்டதாக மருத்துவர் கூறியுள்ளார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதற்கு ஐந்து நிமிடமே இருக்கும் நிலையில் திடீரென மாணவர் ஒருவர் மரணம் அடைந்து இருக்கும் சம்பவம் அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.