சினிமா
இரண்டு படமும் நல்லா ஓடணும்; துணிவு இயக்குநர் ஹெச். வினோத்தோட அந்த மனசு இருக்கே!
Published
3 weeks agoon
By
Saranya
அஜித்தின் துணிவு படமும் விஜய்யின் வாரிசு படமும் நல்லா ஓடணும் என தனது பேட்டிகளில் இயக்குநர் ஹெச். வினோத் பேசி வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் மருந்துக்கு கூட யாருமே நடிகர் விஜய் உள்பட துணிவு படத்தை பற்றியோ நடிகர் அஜித் பற்றியோ பேசவில்லை. ஆனால், தன் மீது எழுப்பப்பட்ட விமர்சனங்கள் குறித்தும் துணிவு படம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் தெளிவாகவும் சென்ஸிபிளாகவும் பேசி வருகிறார் இயக்குநர் ஹெச். வினோத்.
ரசிகர்கள் அப்டேட் கேட்டு படக்குழுவுக்கு பிரெஷர் கொடுக்காதீங்க என்றும் படம் வெளியாவதற்கு முன்பாக ப்ரமோஷன் வேலைகளை நாங்களே ஆரம்பித்து விடுவோம் என்றும் ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளார் ஹெச். வினோத்.
விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை பண்ணும் போது ரசிகர்களின் ஈகோக்களுக்கும் மார்க்கெட் ஈகோக்களுக்கும் தீனி போட வேண்டிய நிலை உள்ளது என இரண்டு படங்களும் ஒரே தேதியில் மோத உள்ள கிளாஷ் குறித்தும் மறைமுகமாக பேசி உள்ளார் இயக்குநர் ஹெச். வினோத்.
இந்த பொங்கல் பண்டிகைக்கு இரு பெரும் படங்களும் வெளியாகின்றன. 4 முதல் 5 நாள் விடுமுறை இருக்கு. பணம் இருப்பவர்கள் இரண்டு படங்களையும் பார்க்கட்டும், இரண்டு படங்களும் இந்த பொங்கலுக்கு வெற்றி பெறட்டும் என பேசி உள்ளார்.
துணிவு பீஸ்ட் படம் போல இருக்கு என்கிற விமர்சனத்தை எப்படி பார்க்குறீங்க என்கிற கேள்விக்கு? அது நல்ல விஷயம் தான். அப்படி இல்லை என்று தெரிந்தாலே படம் வெற்றி தானே என்றும் போகிற போக்கில் துணிவு படம் பீஸ்ட் படம் மாதிரி இருக்காது என்பதையும் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் ஹெச். வினோத்.
மேலும், மங்காத்தா மாதிரி இருக்கும் பில்லா மாதிரி இருக்கும் என நீங்களே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வராதீங்க, எதிர்பார்ப்புகள் இல்லாமல் படத்தை பார்க்க வாங்க, துணிவு புது மாதிரியாக உங்களை மகிழ்விக்கும் என்று கூறிய வினோத், அஜித் டூப் போட்டு நடித்ததாக வெளியான ட்ரோல்களுக்கும் அதையெல்லாம் பார்த்தா சிரித்து விட்டு போயிடணும் என்று பேசி உள்ளார்.
அஜித் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 11ம் தேதி வெளியாக உள்ள துணிவு வாரிசு படத்தை முந்தி நள்ளிரவு 1 மணி ஷோவுக்கே திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தகக்து.
You may like
-
த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த்.. தளபதி 67 படத்தில் ஆன்போர்ட் ஆன நடிகர்கள் லிஸ்ட்!
-
விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் யார் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு!
-
ஜிமிக்கி பொண்ணு பாடல் ரிலீஸ்; ராஷ்மிகாவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!
-
துணிவு ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ஓடிடியில் தெரியுமா?
-
அட்லி இயக்கத்தில் அஜித்? அடேங்கப்பா இது என்ன படத்துல கூட வராத ட்விஸ்ட்டா இருக்கே!
-
பிப்ரவரி 1,2,3… பெரிய சம்பவத்துக்கு ரெடியாகுங்க; இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த தளபதி 67 ஹின்ட்!