தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் கனமழை கொட்டியது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிசம்பர் மாதம் பிறந்ததிலிருந்தே மழை குறைந்து விட்டது என்பதும் பனி அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது
டிசம்பர் 30-ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதி தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் இலேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

















