தமிழ்நாடு
கோடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

கடந்த சில நாட்களாக கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும், சட்டமன்றத்தில் கூட அதிமுக மற்றும் திமுக எம்எல்ஏக்கள் இடையே இது குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணை நடைபெற்று வருவதற்கு அதிமுக உள்பட ஒருசில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பதும் இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கை போலீசார் விசாரணை செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு ஊட்டி முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணை செய்யப்பட்டது. இன்றைய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட சயானி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்த நிலையில் இந்த வழக்கை நடத்துவது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் உத்தரவுக்காக காத்திருக்கின்றோம் என அரசுவழக்கறிஞர் கூறியதை அடுத்து இந்த வழக்கு செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஊட்டி நீதிமன்றம் தெரிவித்துள்ளது















