தமிழ்நாடு
சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இடியுடன் மழை: இன்னும் ஒரு மணி நேரத்தில் கொட்டப்போகிறது

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்னும் ஓரிரு மணி நேரங்களில் கன மழை பெய்ய போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெயிலின் தாக்கம் மற்றும் மழையின் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் தகவல் வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இன்று சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று சில மணி நேரங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் இதனை அடுத்து மக்கள் முன் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உள்பட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக இருந்து வரும் நிலையில் மழை பெய்தால் பொது மக்களுக்கு பெரும் நிம்மதி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.