Connect with us

வணிகம்

மத்திய அரசு ஓய்வூதிய விதிகளில் புதிய மாற்றம்: தவறான நடத்தையால் பென்ஷன் இழக்கும் ஊழியர்கள்!

Published

on

மத்திய அரசு ஓய்வூதிய விதிகளில் முக்கியமான மாற்றத்தை அறிவித்து புதிய திருத்த விதிகளை மே 22, 2025 முதல் அமல்படுத்தியுள்ளது. இது 2021-ல் வெளியான மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள் சட்டத்தின் விதி 37யில் செய்யப்பட்ட திருத்தமாகும்.

இந்த புதிய விதி, மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பொதுத்துறை நிறுவனங்களில் (PSU) பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இவர்கள் பின்னர் தவறான நடத்தை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டாலோ, அரசுப் பணிக்காக பெற்றிருந்த முழுமையான ஓய்வூதிய பலன்களையும் இழக்க நேரிடும்.


🛑 என்ன மாற்றம்?

புதிய விதி 37(29C) -ன் அடிப்படையில்:

“PSU-வில் பணிபுரிந்து பின்னர் தவறான நடத்தை காரணமாக நீக்கப்படும் ஊழியர்கள், முந்தைய அரசு பணிக்காக பெற்ற ஓய்வூதியத்தையும் இழப்பார்கள். அவர்களது பணிநீக்கம் தொடர்பான முடிவுகள் உரிய அமைச்சகம் மூலம் மதிப்பாய்வு செய்யப்படும்.”


👥 யாரெல்லாம் இந்த விதியின் கீழ் வருவார்கள்?

  • டிசம்பர் 31, 2003 அல்லது அதற்கு முன்பு அரசு சேவையில் சேர்ந்தவர்கள்.
    இவர்களுக்கு இது பொருந்தும்.

இந்த விதியின் கீழ் வராதவர்கள்:

  1. ரயில்வே பணியாளர்கள்

  2. தினசரி கூலி / கேஷுவல் தொழிலாளர்கள்

  3. IAS, IPS, IFoS அதிகாரிகள்

Translate »
small business landing pages | biolinker.