வணிகம்
ஒரே மாதத்தில் 27% உயர்ந்த சுஸ்லான் பங்குகள் – இப்போது வாங்கலாமா? மேலும் உயர வாய்ப்பு உள்ளதா?

சுஸ்லான் எனர்ஜி பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் 27% லாபத்தை பதிவு செய்து முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளன. மே மாதத்தில் மட்டும் இந்த பங்கு விலை வேகமாக உயர்ந்துள்ளது. ஆனால் ஜூன் 2-ஆம் தேதி பங்கு விலை சிறிது சரிவு கண்டுள்ளது. இதனால் தற்போதைய நிலைபாடு, மேலும் விலை உயருமா? இப்போது முதலீடு செய்வது நல்லதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
திங்கட்கிழமை (ஜூன் 2) சுஸ்லான் எனர்ஜி பங்கு 0.34% குறைந்து ₹71.22 என்ற விலையில் முடிவடைந்தது. ஆனாலும் கடந்த ஒரு மாதத்தில் இந்த பங்கு 26.57% வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகர லாபத்தில் 364% அபார வளர்ச்சி!
ஜனவரி-மார்ச் 2025 காலாண்டில் (Q4 FY25), சுஸ்லான் நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டாக (YoY) 364% நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் காரணம், ₹600 கோடி வருமானம் ஒத்திவைக்கப்பட்ட வரியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.254 கோடியாக இருந்த நிகர லாபம், தற்போது ரூ.1,181 கோடியாக உயர்ந்துள்ளது. இதே போல் வருவாய் 73.2% உயர்ந்து ₹3,773.5 கோடியாக உள்ளது.
பங்கு விலை மேலும் உயருமா?
தொழில்நுட்ப ரீதியாக, சுஸ்லான் பங்கு தற்போது ₹64 முதல் ₹68 வரையிலான நிலைக்கு மீண்டும் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. ₹75ஐ தாண்டி விலை அதிகரித்தால், ₹78 வரை போகும் என நிபுணர்கள் நம்புகின்றனர். அதேசமயம் ₹63-க்கு கீழே சென்றால் பங்கு வாங்குவது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
முக்கிய நிலைகள்:
ஆதரவு நிலை: ₹68
எதிர்ப்பு நிலை: ₹75
மீள்நோக்கம் விலை: ₹67–₹78 (குறுகிய காலம்)
தற்போதைய நிலை:
ஜூன் 2 அன்று பங்கு 0.46% குறைந்து ₹71.15 என முடிவடைந்தது. எனவே பங்கு மீது இன்னும் சில நாட்களுக்கு கவனம் செலுத்தலாம்.

