இந்தியா
தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது: அடித்துக்கூறும் மம்தா பானர்ஜி!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக இரண்டாம் கட்ட தேர்தலின் போது மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியாக கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் மூன்றாம் கட்ட தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜியின் திருனாமுல் காங்கிரஸும், பாஜகவும் தீவிரமாக உள்ளது. தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி பாஜகவை காய்ச்சி எடுத்துவிட்டார்.
மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற மோடியின் எண்ணம் பகல் கனவாகவே நீடிக்கும். வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஒட்டுமொத்தமாக நூறு இடங்களுக்கு மேல் கிடைக்காது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றார் மம்தா பானர்ஜி.






















