தமிழ்நாடு
சீமானின் கருத்தில் நியாயம் இருக்கிறது: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
சீமானின் கருத்தில் நியாயம் இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவின் ‘பி’ டீம்தான் சீமான் என்றும் பாஜகவுக்கு மறைமுகமாக சீமான் ஆதரவு அளித்து வருகிறார் என்றும் அரசியல் தலைவர்கள் பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் பாஜக பிரமுகர் ராகவன் அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதுகூட அவருக்கு ஆதரவாக சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சீமானின் கருத்தில் நியாயம் இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 100 நாள் வேலை திட்டம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் சீமான் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார் என்பதும், அந்த கருத்துக்கு அரசியல் பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பதும் தெரிந்ததே.
ஆனால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து சீமான் சொன்ன கருத்தில் நியாயம் இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த இந்த கருத்துக்களை தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்து இருப்பதை அடுத்து பாஜகவின் மறைமுக ஆதரவாளர் சீமான் என்பதை உறுதி செய்வதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.