சினிமா செய்திகள்
பிக்பாஸ் ரியோ வீட்டில் விசேஷம்: குவிந்த நட்சத்திரங்கள்!
சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஆரி, பாலாஜி ஆகிய இருவரும் முதல் இரண்டு இடங்களை பெற்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி சந்தித்து தங்கள் நட்பை புதுப்பித்து வருகின்றனர். குறிப்பாக ஒவ்வொருவர் வீட்டில் நடக்கும் விசேஷங்களிலும் அனைத்து சக போட்டியாளர்களும் தவறாமல் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது ரியோ குழந்தையின் முதல் பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மட்டுமின்றி விஜய் டிவியின் பிரபலங்களும் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் வின்னர் ஆரி, சோம்சேகர், சம்யுக்தா, உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர் அஸ்வின், தொகுப்பாளினி பாவனா உள்பட பலரும் கலந்து கொண்டனர். அனைவரும் ரியோவின் குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.