இந்தியா
எலான் மஸ்க்கிற்கு ஊதுபத்தி ஏற்றி பூஜை செய்த ஆண்கள் உரிமைகள் அமைப்பு: பெங்களூரில் பரபரப்பு..!

டெஸ்லா நிறுவன அதிபரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க்கிற்கு பெங்களூரை சேர்ந்த ஆண்கள் உரிமைகள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஊதுபத்தி ஏற்றி பூஜை செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
உலகம் முழுவதும் எலான் மஸ்க் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் பெங்களூரை சேர்ந்த ஆண்கள் உரிமைகள் அமைப்பு அவருக்கு ஊதுபத்தி ஏற்றி பூஜை செய்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆண்கள் தங்கள் உரிமைகளை இழந்து வருகிறார்கள் என்றும் பாலியல் சட்டங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறிவரும் இந்த அமைப்பு ஆண்களின் உரிமைக்காக கடந்த சில வருடங்களாக போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரில் கூட தங்களது கருத்துக்களை பகிரங்கமாக பதிவு செய்ய முடியாத நிலை இருக்கிறது என்றும் ஆனால் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து நாங்கள் சுதந்திரமாக ட்விட்டரில் எங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறோம் என்றும் அதனால் தான் எலான் மஸ்க்கிற்கு பூஜை செய்து வருகிறோம் என்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பெண்களின் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டம் என்பது தேவையான ஒன்றுதான் என்றும் ஆனால் அதே நேரத்தில் அந்த சட்டம் அப்பாவி ஆண்கள் சிலர் மீது தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் எனவே ஆண்களுக்காக போராடும் அமைப்பாக இந்த அமைப்பை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எலான் மஸ்க் அவர்கள் எங்களுக்கு ஊக்கம் அளிக்கும் நபராக தெரிகிறார் என்றும் அதனால் தான் அவருக்கு பூஜை செய்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த பூஜை குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆண்கள் உரிமை அமைப்பைச் சேர்ந்த டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோக்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க் அவர்களுக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. ஆனால் பூஜை செய்யும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளதாக பலர் இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.
SIFF members are worshipping guru @elonmusk in Bengaluru, India for purchasing Twitter and allowing men to express their views against the oppression of authorities.@realsiff pic.twitter.com/hXQcflJsKd
— Sriman NarSingh 🌪 (@SigmaINMatrix) February 26, 2023