இந்தியா
பெங்களூரில் உருவாக்கப்பட்ட ராட்சச மிதக்கும் தீவு.. சாதனை பட்டியலில் இடம்!

பெங்களூர்: பெங்களூரில் இருக்கும் செயற்கை தீவு ஒன்று இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் தீவு என்ற பெயரை பெற்று இருக்கிறது.
பெங்களூரில் எலக்ரானிக் சிட்டி பகுதிக்கு அருகில் இருக்கிறது ஹெப்பகோடி ஏரி, ஒரு காலத்தில் கூவம் நதியை போலத்தான் இது குப்பை மட்டுமே போடப்பட பயன்படுத்தப்பட்டு வந்தது. அதேபோல், இதில் முழுக்க முழுக்க களைகள் முளைத்து மிக மோசமாக காட்சி அளித்தது.
இந்த நிலையில் இதை இப்போது சுத்தம் செய்து இருக்கிறார்கள். சுத்தம் செய்ததோடு, இதில் குட்டி தீவு ஒன்றையும் உருவாக்கி உள்ளனர்.
உலகம் முழுக்க ஏரிகளில் மிதக்கும் தீவுகளை உருவாக்குவது வழக்கம். அதாவது ஏரிகளின் நடுப்பகுதியில் செயற்கையாக மண்ணை வைத்து நடுவில் தீவை உருவாக்குவார்கள்.
சில தீவுகளை மண் இல்லாமல் மிதக்கும் உபகரணங்கள் கொண்டு உருவாக்குவார்கள். அந்த வகையில் ஹெப்பகோடி ஏரியில் தற்போது மிதக்கும் டியூப்கள் வைத்து பெரிய தீவை உருவாக்கி உள்ளனர்.














