இந்தியா
லண்டனுடன் போட்டி போடும் பெங்களூரு எதில் தெரியுமா?

இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்பட்டு வரும் பெங்களூருவில் நாளுக்கு நாள் டிராப்பிக் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் டச்சு இருப்பிட தொழில்நுட்ப நிபுணர் டாம் டாம் வெளியிட்டுள்ள டிராப்பிக் குறியீட்டில் பெங்களூரு டிராப்பிக் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
லண்டனுக்கு அடுத்தபடியாக, போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களில் பெங்களூரு இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் 10 கிலோ மீட்டரை கடக்க 29 நிமிடங்கள் 10 நொடிகள் ஆகின்றன. பரபரப்பான நேரங்களில் வாகனங்களின் அதிகபட்ச சராசரி வேகம் ஒரு மணி நேரத்திற்கு 18 கிலோ மீட்டராக உள்ளது.

Bengaluru Become Second Most Congsted City After London
லண்டனில் 10 கிலோ மீட்டரை கடக்க 36 நிமிடங்கள் 20 நொடிகள் ஆகின்றன.
பெங்களூரு அவுட்டர் ரிங் ரோடு, சில்க் போர்டு – பன்சங்கரி, சில்க் போர்டு – கே ஆர் புரம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகளே டிராப்பிக் அதிகமாக உள்ள முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது.














