தமிழ்நாடு
என் சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி… என எழுதுங்கள்: துரைமுருகன் உருக்கம்!

தமிழக சட்டசபையில் இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நான் இறந்த பின்னர் எனது கல்லரையில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று எழுதுங்கள் என உருக்கமாக பேசினார்.

#image_title
சட்டசபையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், நீண்ட நெடுங்காலம் எங்கள் கட்சியில் இருந்தவன் நான். இன்னும் இருக்கப் போகிறவன். என்றைக்காவது ஒருநாள் மறையப் போகிறவன். மறைந்த பின்னர் எனது சமாதியில், கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று ஒரு வரி எழுதினால் போதும். என் தலைவர் கலைஞரின் கோபாலபுரத்து விசுவாசியாக வாழ்ந்தேன். இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றார்.
மேலும் பேசிய அமைச்சர் துரைமுருகன், ஆளுநரின் டீ விருந்துக்கு நானும் தலைவரும் சென்றபோது என் வயதைப் பற்றி கேட்டார். அதற்கு முதல்வர், எங்க அப்பாவுடன் 53 வருடங்களுக்கு மேலாக இருந்தவர். இப்போது என்னுடன் இருக்கிறார் என்றார். அப்போது ஆளுநர் அங்கு இருந்த உதயாவை காட்டி அவருடனும் இருக்கிறார் என்றார். உடனே நான், உதயாவுக்கு ஒரு பையன் இருக்கிறான் அவனுடனும் நான்தான் இருப்பேன் என்றேன். நான் 100 வயது வரை இருப்பேன் என பேசினார்.