Connect with us

தமிழ்நாடு

வாரந்தோறும் ஷார்ஜாவுக்கு கோவையில் இருந்து 6 டன் மாம்பழங்கள் ஏற்றுமதி!

Published

on

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கு வளாகம் அமைந்துள்ளது. உள்நாட்டின் பல பகுதிகளுக்கும், ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கும் கோவையில் இருந்து சரக்குகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. நேரடியான விமான சேவை அல்லாத ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கும் ‘பாண்டட் டிரக்’ சேவையின் மூலமாக சாலை வழியாக கொச்சி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மாம்பழ சீசன்

தற்போது மாம்பழ சீசன் தொடங்கி இருக்கும் நிலையில், கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு ஒரு வாரம் ஒருமுறை 6 டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது குறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், எப்போதும் வழக்கமாக பொறியியல் உற்பத்தி பொருட்கள், பழங்கள், வார்ப்படம், காய்கறிகள் மற்றும் சிப்ஸ் உள்பட பல உணவு வகைகள் முன்பதிவு செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.

கோடை காலத்தில் எப்போதும் மாம்பழம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் கேரளா மற்றும் பொள்ளாச்சியில் இருந்து, மாம்பழங்கள் அதிகளவில் ஷார்ஜாவுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்படுகிறது. வாரம் ஒருமுறை 6 டன் எடையிலான மாம்பழங்கள் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஒரே நேரத்தில் 250 டன் சரக்குகளை கையாளும் உள்கட்டமைப்பு வசதிகள் கோவை விமான நிலையத்தில் உள்ளது. சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை அதிகரித்தால், சரக்குகள் கையாளப்படும் அளவும் கணிசமாக உயரும் என கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

மாதம் ரூ.500 முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் சேமிக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?

வேலைவாய்ப்பு2 மாதங்கள் ago

ரூ.3,20,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைக்கு அறிவிப்பு வெளியீடு!

வணிகம்2 மாதங்கள் ago

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் கூகுள் பே, போன் பே பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?

டிவி3 மாதங்கள் ago

பாக்கியலட்சுமி சீரியல் போல லைசன்ஸ் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

சிறு தொழில்3 மாதங்கள் ago

ரூ.2 லட்சம் முதலீட்டில் மதம் ரூ.80,000 வரை வருமானம் பெற சூப்பர் பிஸ்னஸ் ஐடியா!

தமிழ்நாடு3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வேலைவாய்ப்பு4 மாதங்கள் ago

ரூ.2,33,919/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 மாதங்கள் ago

இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

வேலைவாய்ப்பு4 மாதங்கள் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 2994

தினபலன்4 மாதங்கள் ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/08/2023)!