கிசு கிசு
‘ஆதித்ய வர்மா’ பட நாயகிக்கு கொரோனா.. சிகிச்சைக்கு வர மாட்டேன் என்று பிடிவாதம்!

ஆதித்யா வர்மா நாயகி பனிதா சந்து, கொரோனா பரிசோதனைக்கு வராமல் அடம்பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற படம் ஆதித்ய வர்மா. இந்த படத்தில் துருவுக்கு ஜோடியாக நடித்தவர் பனிதா சந்து. லண்டனில் வசித்து வரும் இவர், படப்பிடிப்பு நாட்களில் மட்டும் இந்தியா வந்து செல்வார். இப்போது கவிதா அண்ட் தெரசா என்ற இங்கிலீஷ் படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக பனிதா கடந்த 20 ஆம் தேதி லண்டனில் இருந்து கொல்கத்தா வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பனிதாவிற்கு தொற்று இல்லை என அறியப்பட்டது. இதனால் அவர் நேரடியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
ஆனால், அவருடன் விமானத்தில் வந்த சக பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அன்றைய தேதியில் அந்த விமானத்தில் வந்த அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சுகாதாரத்துறையினர் பனிதாவை கொரோனா பரிசோதனை செய்ய ஆம்புலன்ஸில் கூட்டிச் சென்றனர். ஆனால், கொரோனா பரிசோதனை நடத்தப்படும் மையம் அசுத்தமாகவும், சுகாதாரக் கேடாகவும் இருப்பதாக கூறி பனிதா ஆம்புலன்ஸில் இருந்து இறங்க மறுத்துவிட்டார். எவ்வளவோ கூறியும், ஒரு அடி கூட எடுத்து வைக்க மறுத்துவிட்டார்.
பின்பு, இங்கிலாந்து தூதரகத்தின் அறிவுறுத்தலின் பெயரில், தனியார் மருத்துவமனையில் ஒன்றில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.















