கிசு கிசு
சட்டமன்ற தேர்தலில் மற்றொரு மூன்றெழுத்து நடிகரும் போட்டி?

வருகிற சட்டமன்றதேர்தலில் திரைத்துறையில் முக்கிய பதவியில் வகிப்பவரும், ஆறடி உயர மூன்றெழுத்து நடிகரும் போட்டியிடுகிறார்.
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டமன்ற தேர்தல் வருகிறது. எப்போதும் போல் அல்லாமல் வருகிற சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருபெரும் ஜாம்பவான்கள் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இதுவே ஆகும். அதற்கு மாற்றாய் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த, கமல் என அனைவரும் களத்தில் குதித்துள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது நடிகர் விஷாலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இரண்டிலும் தலைவர் பொறுப்பை வகித்து வருகிறார்.
இதனிடையே ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், அரசியல் சூழ்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாத விஷாலின் வேட்பு மனுவானது பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது.





















