கிசு கிசு
மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

தீபாவளியின் போது ஹாட்ஸ்டாரில் வெளியாகி, ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் மூக்குத்தி அம்மன்.
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில், இந்துக்களுக்கு எதிரான காட்சிகள் அதிகம் வருகிறது என்று விமர்சனம் வந்துகொண்டு இருக்கின்றன. மறுபக்கம் இந்துக்களுக்கு ஆதரவான திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்துக்களுக்கு ஆதரவான திரைப்படம் மூக்குத்தி அம்மன் என்பது பற்றி பெரிய சர்ச்சைகள் இல்லை என்றாலும், இந்துக்களுக்கு எதிரான திரைப்படம் என்பதற்குப் பல ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதில் முக்கியமான ஒன்று மனோ பாலாவை வைத்து எடுக்கப்பட்டு இருந்த கிருத்துவ மத போதனைகளை விமர்சிக்கும் படியான காட்சி. டிரெய்லரில் வந்த அந்த காட்சி ஏன் நீக்கப்பட்டது என்று சர்ச்சை எழுந்துள்ளது.
இதுபற்றி விசாரிக்கும் பொது டிஸ்னி ஹாட்ஸ்டார் தான் அந்த காட்சி நீக்கப்பட்டதற்குக் காரணம். தாங்கள் ஒரு கிருத்துவ தலைமை கொண்ட நிறுவனம் என்பதால், தயாரிப்பு குழுவினரிடம் அந்த காட்சிகளை நீக்கக் கூறியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட சர்ச்சை மூக்குத்தி அம்மனுக்கு ஒரு இலவச பப்ளிசிட்டியாகவும் அமைந்துள்ளது.
















