சினிமா செய்திகள்
ஹீரோ ஆகும் நடிகர் முரளியின் இளைய மகன்..!- தளபதி விஜய் குடும்பத்தில் இன்னொரு நாயகன்

நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆக உள்ளார்.

நடிகர் அதர்வா கடைசியாக 100 என்னும் படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து குருதி ஆட்டம், பத்ரி வெங்கடேஷ் ஒரு பெயர் அறிவிக்கப்படாத மற்றொரு படம் என படங்கள் வெளியாக உள்ளன. தமிழ் சினிமாவில் இளைய நடிகர்களுள் முன்னணியில் இருக்கும் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியும் தற்போது நாயகன் ஆக சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார்.
ஆகாஷ் சமீபத்தில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் ஸ்நேகா ப்ரிட்டோவை திருமணம் செய்துள்ளார். சேவியர் பிரிட்டோ தளபதி விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் அக்காள் மகன். இதன் மூலம் நடிகர் அதர்வா குடும்பத்துடன் சம்பந்தம் வைத்து அவர்களின் உறவினர் ஆகிவிட்டார் நடிகர் விஜய்.
மாஸ்டர் படத்துக்குப் பின்னர் சேவியர் பிரிட்டோ தனது தயாரிப்பில் மருமகனை நாயகன் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















