இந்தியா
நடுரோட்டில் மார்பை பிடித்த இளைஞருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்: வைரல் வீடியோ
Published
1 year agoon
By
Shiva
நடுரோட்டில் அட்ரஸ் கேட்பது போல் நடித்து இளம் பெண்ணின் மார்பை படித்த இளைஞருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்ணின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாலையில் தனியாக நடந்து கொண்டிருந்தபோது, அப்போது அவருக்கு எதிராக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அட்ரஸ் போல அவரை நெருங்கி அவருடைய மார்பை பிடித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் உடனடியாக அந்த இளைஞரை தாக்க முயன்றார். ஆனால் அந்த இளைஞர் இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்றபோது இளம்பெண் போராடி அந்த இரு சக்கர வாகனத்தை அருகிலிருந்த சாக்கடைக்குள் தள்ளிவிட்டார்.
இந்த நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் கூடியதால் அந்த இளைஞரால் தப்பிக்க முடியவில்லை. இதனை அடுத்து தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த இளைஞரை சரமாரிய திட்டிய இளம் பெண் காவல்துறைக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.
இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட அந்த இளைஞரின் பெயர் மதுசூதனன் ராஜ்குமார் என்பதும் அவர் அசாம் மாநில தலைநகர் கவுகாத்தி பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
காவல் துறையிடமும் அந்த பெண்ணிடமும் நபர் தன்னை மன்னித்து விடுமாறு கதறியும் இளம்பெண் விடாப்பிடியாக காவல்துறையினரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் கொடுத்தார். இதனையடுத்து அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாவனா என்ற அந்தப் பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை செய்துள்ளார். மேலும் இது குறித்த வீடியோவையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/bhavna.kashyap.750/posts/2081774441964701
You may like
-
கே.டி.ராகவனை கைது செய்யுங்கள்: ஜோதிமணி எம்பி டிஜிபி அலுவலகத்தில் புகார்!
-
கணவர் மீது நடவடிக்கை எடுங்கள்: சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா போலீசில் புகார்!
-
சன்னி லியோனால் டார்ச்சர் தாங்கல.. போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்த இளைஞர்?
-
ராஜேஷ் குப்தா என்பவரின் புதிய செருப்பைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்!